search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தாலிபன்களின் ஆட்சியால் இருதரப்பு தொடர் ஒத்திவைப்பு- ஆஸி. கிரிக்கெட் வாரியத்திடம் ரஷித் கான் கேள்வி
    X

    தாலிபன்களின் ஆட்சியால் இருதரப்பு தொடர் ஒத்திவைப்பு- ஆஸி. கிரிக்கெட் வாரியத்திடம் ரஷித் கான் கேள்வி

    • தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
    • விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

    உலகக் கோப்பை டி20 தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நாளையுடன் சூப்பர் 8 சுற்றும் முடிவடைய உள்ளது. இதன் முடிவில் குரூப் 2-ல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

    இந்த குரூப்-ல் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இந்த கேள்வியை முன் வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

    எனவே, என்னைப் பொறுத்தவரை, எந்த அணிக்கு எதிராகவும் விளையாடுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். சில விஷயங்கள், அரசாங்கம் மற்றும் அரசியல் விஷயங்கள், எனக்கு இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு அது பிடிக்கவில்லை.

    ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது. நான் எப்போதும் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட விரும்புகிறேன். பிக்பாஷ் கிரிக்கெட் மூலம், அங்குள்ள ரசிகர்களிடமிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு ரஷித் கான் கூறினார்.

    Next Story
    ×