search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய ஆர்.சி.பி. செய்ய வேண்டியது இதுதான்
    X

    பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய ஆர்.சி.பி. செய்ய வேண்டியது இதுதான்

    • சிஎஸ்கே, ஆர்சிபி இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
    • இதில் வென்றாலோ, மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    பெங்களூரு:

    பிளே ஆப் சுற்றுக்கான 4வது அணியாக நுழையப் போவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா, நானா என போட்டி ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    உதாரணமாக, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்தும் வெற்றிபெற வேண்டும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    அதன்படி, 5 ஓவர்கள் வரை கொண்ட ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் களமிறங்கினால் 5 ஓவர்களில் 75 ரன்களை அடித்து, சிஎஸ்கேவை 57 ரன்களில் சுருட்ட வேண்டும்.

    ஒருவேளை சேசிங் என்றால் சிஎஸ்கே 5 ஓவரில் 75 ரன்களை அடித்தால், ஆர்சிபி அணி 3.1 ஓவரில் இலக்கை சேஸ் செய்யவேண்டும். இது நடந்தால் மட்டுமே ஆர்சிபியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    Next Story
    ×