என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி20 எதிர்காலம்: துருவி துருவி கேட்ட பத்திரிகையாளர்கள்- ஸ்மார்ட்டாக நழுவிய ரோகித் சர்மா
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
- பத்திரிகையாளர்களிடம் ஐபிஎல் குறித்து கேள்வி கேட்கக்கூடாது என ரோகித் சர்மா கேட்டுக்கொண்டார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ஐ.பி.எல். தொடர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் குறித்து கேள்விகளை எழுப்ப தயாராக இருந்தனர்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடங்கியதும் ரோகித் சர்மா, ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்றார். இது பத்திரியாளர் சந்திப்பு தானே?... நாங்கள் கேள்விகள் கேட்க முடியும் என நிருபர்கள் தெரிவித்தனர். பிசிசிஐ லோகோவை சுட்டிக்காட்டு இது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பின்னர், அடுத்த இரண்டு வருடத்திற்கு கிரிக்கெட் விளையாடுவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. டி20 கிரிக்கெட் மற்றும் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
அதற்கு எனக்கான, என்முன் இருக்கும் கிரிக்கெட்டில் நான் விளையாடுவேன் என்றார். அப்போதும் டி20 எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா பிடி கொடுக்காமல் பதில் அளித்தார்.
சீனியர் வீரர்களான நீங்கள் மற்றும் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாட விருப்பப்படுகிறீர்களா? என்று நேரடியாக கேள்விகளை தொடுத்தனர்.
அதற்கு ரோகித் சர்மா, நாங்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட விருப்பப்படுகிறோம். யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாட விரும்புவார்கள் என்றார்.
அதன்பின், நீங்கள் அனைவரும் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாக ஒரு பதிலை பெறுவீர்கள் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தார்.