search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் ரோகித் சர்மா விலகல்
    X

    வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் ரோகித் சர்மா விலகல்

    • வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார்.
    • 2-வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார்.

    வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2- 1 (3) என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு 2- 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    அதனால் முதல் போட்டிக்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4வது இடத்திலிருந்த இந்தியா தென்னாப்பிரிக்காவை முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வீழ்த்திய உதவியுடன் நேரடியாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன் காரணமாக இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் களமிறங்கவில்லை.

    வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார். இருப்பினும் அவரது காயம் லேசாக இருந்த காரணத்தால் 2-வது போட்டிக்கு முன்பாக குணமடைந்து வந்து விடுவார் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்தன.

    இந்நிலையில் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் 2வது போட்டியிலிருந்தும் ரோகித் சர்மா விலகுவதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

    2-வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிய வருகிறது.

    Next Story
    ×