என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்திய கவுசிக் காந்தி- சேலம் அணி அபார வெற்றி
- கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார்.
- 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர்.
இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்கின.
முதலில் பேட்டிங் செய்த ஆகாஷ் சும்ரா 10 ரன்கள் மற்றும் அமித் சத்விக் 22 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, மான் பாஃனா 16 ரன்களும், மோகித் ஹரிஹரன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி வரை விளையாடிய கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார். கடைசி பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து சேலம் அணியின் வெற்றி வாகையை சூடினார்.
முகமது அத்னான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்