search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இலங்கை தொடரை எதிர்பார்க்கும் ஷ்ரேயாஸ் அய்யர்
    X

    இலங்கை தொடரை எதிர்பார்க்கும் ஷ்ரேயாஸ் அய்யர்

    • ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது.
    • காயம் காரணமாக விளையாட முடியாது என ஷ்ரேயாஸ் அய்யர் ஒதுங்கி கொண்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப்பின் இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. தனது உடல்திறனை நிரூபிக்கும் வகையில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது.

    ஆனால், முதுகு வலி காரணமாக ரஞ்சி போட்டிகளில் இருந்து விலகினார். இதனால் பிசிசிஐ-க்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இறுதியாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

    அதன்பிறகு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக விளையாடினார். அவரது தலைமையில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.

    தற்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடி வருகிறது. அதன்பின் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.

    அதன்பின் ஜூலை 2-வது வாரத்திற்குப் பிறகு இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    முன்னணி வீரர்கள் ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டால் ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இணைய வாய்ப்புள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு கவுதம கம்பீர் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    Next Story
    ×