என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
சுப்மன்கில்லின் ஆட்டம் இந்த சீசனில் மறக்க முடியாத ஒன்றாகும்- டெண்டுல்கர் புகழாரம்
- மிகவும் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க சரியான தருணத்தில் அபாரமாக ஆட வேண்டும்.
- குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மும்பை:
இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்த வீரராக சுப்மன்கில் இருக்கிறார்.
குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 16 ஆட்டத்தில் விளையாடி 851 ரன் குவித்துள்ளார். 3 சதமும், 4 அரை சதமும் அடித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான சதமும், மும்பைக்கு எதிரான 2-வது தகுதி சுற்றில் அடித்த செஞ்சுரியும் மிகவும் முக்கியத்துவம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் சுப்மன் கில் ஆட்டம் தன்னை மிகவும் கவர்ந்ததாக கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
சுப்மன்கில்லின் ஆட்டம் இந்த சீசனில் மறக்க முடியாத ஒன்றாகும். குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு சதம் மும்பை இந்தியன்சுக்கு நம்பிக்கையை கொடுத்தது. மற்றொன்று மும்பைக்கு தோல்வியை கொடுத்தது. இதுதான் கிரிக்கெட் விளையாட்டின் இயல்பு.
சுப்மன்கில்லின் குணம், அமைதி, ரன் குவிக்க வேண்டும் என்ற ஆர்வம், விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுக்க ஓடுவது போன்ற கள செயல்பாடு என்னை கவர்ந்தது.
மிகவும் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க சரியான தருணத்தில் அபாரமாக ஆட வேண்டும். அதை சுப்மன்கில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக 12-வது ஓவர் முதல் செய்திருக்கிறார். அது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும்.
குஜராத் அணி வலிமை யானது. சுப்மன்கில், ஹார்திக் பாண்டயா, மில்லர் விக்கெட்டுகள் சென்னை சூப்பர் கிங்சுக்கு முக்கியமானது. அதேபோல சென்னை அணியும் பலமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. 8-வது பேட்ஸ்மேனாக டோனி களம் இறங்குகிறார்.
இந்த இறுதிப்போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும்.
இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.