search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கவுண்டி கிரிக்கெட்டில் 501 ரன் சேசிங் செய்து அசத்தல் - சர்ரே அணி சாதனை
    X

    கவுண்டி கிரிக்கெட்டில் 501 ரன் சேசிங் செய்து அசத்தல் - சர்ரே அணி சாதனை

    • சர்ரே அணி வெற்றி பெற 501 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • அந்த அணியின் சிப்ளே, பென் போக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டிவிஷன் 1-ல் கெண்ட் அணியும், சர்ரே அணியும் மோதின. டாஸ் வென்ற கெண்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கெண்ட் அணி முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் காக்ஸ் சதமடித்து 133 ரன்கள் எடுத்தார். ஜோய் எவிசன் 58 ரன்கள் சேர்த்தார்.

    சர்ரே அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டும், ஜோர்டான் கிளார்க், கஸ் அட்கின்ஸன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சீன் அபாட் 34 ரன்கள் எடுத்தார்.

    கெண்ட் அணி சார்பில் மேத்யூ குயின், வெஸ் அகர் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஜோய் எவிசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 2வது இன்னிங்சில் ஆடிய கெண்ட் அணி 344 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டவாண்டா முயியே 79 ரன்னும், ஹமிதுல்லா குவாடி 72 ரன்னும், டி பெல் டிரம்மண்ட் 59 ரன்னும் எடுத்தனர்.

    சர்ரே அணி சார்பில் ஜோர்டான் கிளார்க் 5 விக்கெட்டும், டேனியல் வோரல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    501 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சர்ரே அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் வீரர்கள் அதிரடியில் இறங்கினர்.

    அந்த அணியின் 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்தினர். ஜேமி ஸ்மித் 114 ரன்னும், பென் போக்ஸ் 124 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். டாம் லாதம் 58 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், சர்ரே அணி 5 விக்கெட் இழப்புக்கு 501 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. டொமினிக் சிப்ளே 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    Next Story
    ×