என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
காதலர் தினம்: மனைவிக்கு பதில் வேறு பெண்ணுக்கு வாழ்த்து - வசமாக சிக்கிய ஸ்மித்
- தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
- ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் சுமித் இடம் பெற்று உள்ளார்.
ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 18-ம் தேதி நடக்கிறது.
இந்த நிலையில், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு ஸ்டீவ் சுமித் வாழ்த்து கூறி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
டுவிட்டரில் அழகான மனைவி டேனி வில்லீஸூக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...! உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் சிறிது நாட்களில் உன்னை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், அவர் டேக் செய்தவர் தான் தவறு. ஸ்டீவ் சுமித்தின் மனைவி டேனி வில்லீஸ் (Danielle Willis நிக் நேம் Dani), Dani_willis இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஆனால், டுவிட்டரில் டி.குயீன் என்ற வேறு ஒருவர் தான் இருக்கிறார். இதனை சற்றும் யோசிக்காத ஸ்டீவ் சுமித், தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தனது கணவரை பார்ப்பதற்காக டேனி வில்லீஸ் விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.