search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வந்த வேகத்தில் நடையை கட்டிய சூர்யகுமார் யாதவ்: 3 ரன்னில் அவுட்
    X

    வந்த வேகத்தில் நடையை கட்டிய சூர்யகுமார் யாதவ்: 3 ரன்னில் அவுட்

    • ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட்.
    • ரிஷப் பண்ட் டக்அவுட்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 1.4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 2-வது ஓவரில் இரண்டு பவுண்டர் கொடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    3-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 4 ஓவர் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சூர்யகுமார் யாதவ் லெக்சைடு தூக்கி அடித்தார். ஆனால் கிளாசின் அற்புதமாக கேட்ச் பிடிக்க சூர்யகுமார் யாதவ் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்புாது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    Next Story
    ×