search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இன்று முதல் தொடக்கம்
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இன்று முதல் தொடக்கம்

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜூன் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    களிமண் தரையில் நடைபெறும் போட்டியான பிரெஞ்சு ஓபனில் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2005ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் அறிமுகமான ரபெல் நடால் 14 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதித்து இருக்கிறார். இதுவரை அந்த போட்டியில் 112 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கும் அவர் 3 ஆட்டங்களில் மட்டுமே தோல்வி கண்டு இருக்கிறார்.

    22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காயம் காரணமாக முதல்முறையாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் இந்த முறை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கனிந்து இருக்கிறது. இதேபோல் முன்னாள் சாம்பியனான ஆன்டி முர்ரேவும் (இங்கிலாந்து) போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.439 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.20¼ கோடியும், 2-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்பவர்களுக்கு ரூ.5¼ கோடி பரிசாக கிட்டும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, 2 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×