search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம்
    X

    விவிஎஸ் லட்சுமணன்

    நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம்

    • இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 -வரை நடைபெறுகிறது.
    • நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

    நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×