என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐபில் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்
    X

    ஐபில் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

    • தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
    • அந்த அணி இரு வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

    அந்த அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பு தொடரில் அந்த அணி இரு வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×