என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![கிரிக்கெட்டை தொடர்ந்து கேண்டி க்ரஷ் கேமில் ஆர்வம் காட்டும் டோனி கிரிக்கெட்டை தொடர்ந்து கேண்டி க்ரஷ் கேமில் ஆர்வம் காட்டும் டோனி](https://media.maalaimalar.com/h-upload/2023/06/26/1904753-dhoni.webp)
கிரிக்கெட்டை தொடர்ந்து கேண்டி க்ரஷ் கேமில் ஆர்வம் காட்டும் டோனி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விமானத்தில் சென்ற டோனி கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
- எந்தளவுக்கு உங்களை பிடிக்கும் என்று அந்த விமான ஊழியர் பெண்கள் ஒரு துண்டு எழுதியதையும் அவரிடம் கொடுத்தனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் டோனி, 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்று, ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இந்த வருடம் மீண்டும் சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்தி 5-வது கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விமானத்தில் பணிப்பெண் ஒருவர் எம்எஸ் டோனிக்கு பரிசு ஒன்றை வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விமானத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் நிறைய சாக்லேட் மற்றும் பிஸ்கட் இனிப்பு பண்டங்களை தட்டில் வைத்து டோனியிடம் சென்று நீட்டினார். அந்த சமயத்தில் மிகவும் ஆர்வமாக கேண்டி க்ரஷ் விளையாட்டை டேப்லட் போனில் விளையாடிக் கொண்டிருந்த அவர் அதை பார்த்து ஆச்சரியமடைந்தார்.
மேலும் எந்தளவுக்கு உங்களை பிடிக்கும் என்று அந்த விமான ஊழியர் பெண்கள் ஒரு துண்டு எழுதியதையும் அவரிடம் கொடுத்தனர். அதை சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்ட டோனி சில அன்பான வார்த்தைகளை பேசினார். மேலும் இவ்வளவு சாக்லேட்டுகள் எனக்கு எதற்கு இது மட்டும் போதும் என்று ஒரே ஒரு இனிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை அந்த பெண்ணிடமே கொடுத்து விட்டார்.
டோனி கேண்டி கிரஷ் விளையாடுகிறார் என்று தெரிந்ததும் அந்த வார்த்தையும் விளையாட்டும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது.