என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கவெம் ஹாட்ஜ், ஜோஷ்வா அபாரம்: முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் கவெம் ஹாட்ஜ் 120 ரன்கள் அடித்தார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட், மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
பிராத்வைட் 48, மிகைல் லூயிஸ் 21, கிர்க் மெக்கென்சி 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு கவெம் ஹாட்ஜ் மற்றும் அலிக் அத்தனாஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இருவரும் 175 ரன்கள் சேர்த்த நிலையில் அலிக் அத்தானாஸ் 82 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவெம் ஹாட்ஜ் சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்னில் அவுட் ஆனார்.
இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 84 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. ஜேசன் ஹோல்டர் 27 ரன்னும், சின்க்ளேர் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் ஜோஷ்வா டா சில்வா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
10-வது விக்கெட்டுக்கு ஷமார் ஜோசப், ஜோஷ்வா டா சில்வா ஜோடி 71 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜோஷ்வா டா சில்வா 82 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்