search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டோனி இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாதது ஏன்? காரணம் இதுதான்
    X

    டோனி இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாதது ஏன்? காரணம் இதுதான்

    • இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.
    • தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இந்திய அணியின் பாயிற்சியாளர்காக வர முடியாதா? என்ற கேள்வி சிலருக்கு எழக் கூடும்.

    இந்திய அணியின் பயிற்சயாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் ஐசிசி 2024 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    பயிற்சியாளர் பதவிக்குக் கவுதம் காம்பீர், விவிஎஸ். லக்ஷ்மன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஐபிஎல் 2023 தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் கேகேஆர் இணை உரிமையாளர் ஷாருக் கான், காம்பீரை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் காம்பீர், இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.

    இதற்கிடையே தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இந்திய அணியின் பாயிற்சியாளர்காக வர முடியாதா? என்ற கேள்வி சிலருக்கு எழக் கூடும். பி.சி.சி.ஐ விதிகளின்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ஒருவரே இந்திய பயிற்சியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் டோனி தொடர்கிறார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடருடன் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டோனியின் தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவர் தற்போதும் சிஎஸ்கே வீராகவே உள்ளதால் பயிற்சியாளர் பதவிக்கு டோனி தகுதி பெற்றவர் இல்லை.

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதிவுக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை போலி விண்ணப்பங்களாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரில் விண்ணப்பங்கள் வந்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்து இறுதிக் கட்ட தேர்வர்களின் பட்டியலை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×