என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி
- இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
- உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.
உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.
இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.
244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.