என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இறுதிப் போட்டியையும் விட்டுவைக்கல.. அவுட் ஆனாலும், சாதனை படைத்த ரோகித்.. எத்தன தெரியுமா?
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா புது சாதனை.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிதானமாக ஆடியது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களை குவித்து அசத்தினார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும்.
இன்றைய இறுதிப் போட்டியில் 151.61 எனும் அதிரடி ரன்ரேட்டில் விளையாடி வந்த ரோகித் சர்மா மேக்ஸ்வெல் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார். நடப்பு உலகக் கோப்பை 2023 தொடரின் மற்ற போட்டிகளை போன்றே, இன்றைய போட்டியிலும் ரோகித் சர்மா அபார துவக்கத்தை கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரோகித் மூன்று சிக்சர்களை விளாசினார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே 87 சிக்சர்களை அடித்துள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிஸ் கெயில் 85 சிக்சர்களை அடித்ததே, ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. இன்றைய போட்டியின் மூலம் ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த சாதனை மட்டுமின்றி ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர், கேப்டனாக உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர், உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த வீரர் போன்ற சாதனைகளையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தமாக 597 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி ரன்கள் 54.27 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 125.94 ஆகவும் இருந்துள்ளது. இதில் ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும். இதில் ரோகித் சர்மா 31 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்