என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இங்கிலாந்திடம் இருந்து அதிரடியான ஆட்டத்தை ஜெய்ஸ்வால் கற்கவில்லை- டக்கெட் மீது நாசர் உசேன் பாய்ச்சல்
- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
- ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை.
புதுடெல்லி:
பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
5 போட்டிக் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் இரண்டு இரட்டை சதங்களை அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 209 ரன்னும், ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 214 ரன்னும் எடுத்தார்.
3 டெஸ்டின் 6 இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 545 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 109 ஆகும். 50 பவுண்டரிகளும், 22 சிக்சர்களும் அடித்துள்ளார்.
இதற்கிடையே ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எதிர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை பார்க்கும்போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம். அதாவது மற்றவர்கள் டெஸ்டில் விளையாடும் விதத்துக்கும், நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்துக்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது" என்றார்.
டக்கெட் 3-வது டெஸ்டில் சதம் (153 ரன்) அடித்து இருந்தார். அவர் இந்த தொடரில் 288 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் டக்கெட் டின் இந்த வினோதமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் அதிரடியான, ஆக்ரோஷமான ஆட்டத்தை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
அவர் (ஜெய்ஸ்வால்) உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்து கற்றுக் கொண்டவர். அவரது பாதையில் எதிர்கொண்ட கடினங்களால் வளர்ந்த ஆக்ரோஷம் இதுவாகும்.
அவரிடம் இருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதுவாகத்தான் இருக்கும். கொஞ்சம் சுய பரிசோதனை நடக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த 'பாஸ்பால்' ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்