என் மலர்
வழிபாடு
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தெப்ப உற்சவம்:திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஷ்டி நடைபெற்றது.
- பொலிந்துநின்றபிரான் அம்பாள்களுடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தார்.
நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் மாசி திருவிழா கடந்த மார்ச்.1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. கடந்த 5 -ந்தேதி கருட சேவை நடந்தது. நேற்று முன்தினம் திருத்தேரோட்டம் நடந்தது.
பத்தாம் திருவிழாவான நேற்று தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஷ்டி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் அம்பாள்களுடன் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் பொலிந்துநின்றபிரான் அம்பாள்களுடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுதலைவர் எஸ்.பார்த்திபன், எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு் சுவாமி நம்மாழ்வார் மற்றும் ஆச்சாரியார்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்துள்ளனர்.