search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி மாத பிறப்பு: திருப்பதியில் திருப்பாவை சேவை தொடக்கம்!
    X

    மார்கழி மாத பிறப்பு: திருப்பதியில் திருப்பாவை சேவை தொடக்கம்!

    • 11 மாதங்கள் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறும்.
    • 3 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் பாடப்பட்டு சேவை நடந்து வருகிறது. தை மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை 11 மாதங்கள் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறுகிறது.

    இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுப்ரபாத சேவைக்கு பதிலாக அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 14-ந்தேதி 30 நாட்கள் திருப்பாவை சேவை நடைபெறுகிறது. ஜனவரி 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிப்பொழிவு நிலவு வருகிறது.

    இதனால் மலைப்பாதையில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே மலைப் பாதையில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் நேற்று 59,734 பேர் தரிசனம் செய்தனர். 30,654 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×