search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சென்னித்தோட்டம் கமுகண்ணூர் மகாதேவர் கோவில் 65-வது சிவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    சென்னித்தோட்டம் கமுகண்ணூர் மகாதேவர் கோவிலின் தோற்றம்.

    சென்னித்தோட்டம் கமுகண்ணூர் மகாதேவர் கோவில் 65-வது சிவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

    • வருகிற 20-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
    • 20-ந் தேதி சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.

    இந்துசமய அறநிலையத்துறையின் குமரி மாவட்ட திருக்கோவில்கள் (சுசீந்திரம்) நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் சென்னித்தோட்டம் கமுகண்ணூர் மகாதேவர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் 65-வது மகாசிவராத்திரி திருவிழாவும், இந்து சமய மாநாடும் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 20-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.

    முதல் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜையும், 8 மணிக்கு சுத்திகலச பூஜை, 10.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ- மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு கொடிப்பட்டம் வழங்கும் நிகழ்ச்சி, 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கொடிமர பூஜை மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-வது நாள் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, காலை 7 மணிக்கு மாபெரும் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவாசக சித்தர் சிவ.தாமோதரன் திருவாசகம் முற்றோதுகிறார்.

    8.30 மணிக்கு கலசபூஜை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு பகவதி சேவை போன்றவை நடக்கிறது.

    இதேபோல் விழா நாட்களில் ஒவ்ெ்வாரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம், சாமி வாகன பவனி ஆகியவை நடக்கிறது. 8-வது நாள் திருவிழாவான 18-ந் தேதி மாலை 5 மணிக்கு சாமி ரிஷப ரதத்தை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகருமான பொன்மாணிக்கவேல் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். அன்று நள்ளிரவு 12 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளருமான சென்னை ஸ்ரீகாந்த் தேவா மாபெரும் இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவான 20-ந் தேதி காலையில் அபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆறாட்டு பூஜையும் 6.30 மணிக்கு பஜனையை தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×