search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார்- பெரியநாயகிக்கு திருக்கல்யாணம் நாளை நடக்கிறது
    X

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார்- பெரியநாயகிக்கு திருக்கல்யாணம் நாளை நடக்கிறது

    • நாளை மாலை 6.30 மணி முதல் இரவு 6 மணி வரை கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    • திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கும்.

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் கட்டிட வடிவமைப்பில் தலைச்சிறந்து விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.அதேபோல வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோற்றத்தில் நந்தியெம்பெருமான் அருள்பாலிக்கிறார். மேலும் வராகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×