search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    இதுதான் என்னுடைய கடைசி யூரோ கோப்பை: கிறிஸ்டியானோ ரொனால்டோ
    X

    இதுதான் என்னுடைய கடைசி யூரோ கோப்பை: கிறிஸ்டியானோ ரொனால்டோ

    • கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-வது முறையாக யூரோ தொடரில் விளையாடி வருகிறார்.
    • 2016-ல் இவரது தலைமையில் போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். தற்போது யூரோ கோப்பையில் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இதுதான் தன்னுடைய கடைசி யூரோ கோப்பை தொடர் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். ரொனால்டோ 6-வது முறையாக யூரோ கோப்பை தொடரில் விளையாடுகிறார். அடுத்த தொடர் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் நடைபெற இருக்கிறது. அப்போது ரொனோல்டாவுக்கு 43-வது வயதாகிவிடம்.

    "சந்தேகமின்றி இது எனக்கு கடைசி யூரோ. நிச்சயமாக இதுதான். ஆனால் அதைப்பற்றி நான் உணர்ச்சிவசப்படுவதில்லை. கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் உற்சாகம், ரசிகர்களிடம் நான் காணும் உற்சாகம், எனது குடும்பம், மக்களின் ஆர்வம்... கால்பந்து உலகை விட்டு வெளியேறுவது அல்ல. நான் வெற்றி பெறுவதற்கு வேறு என்ன இருக்கிறது?. கால்பந்து பயணத்தில் நான் கொண்டுள்ள உற்சாம் காரணமாக இன்னும் இங்கே இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    2003-ம் ஆண்டு போர்ச்சுக்கல் அணியில் அறிமுகம் ஆனார். 2016-ம் ஆண்டு இவரது தலைமையில் போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. போர்ச்சுக்கல் அணிக்காக 130 கோல்கள் அடித்துள்ளார்.

    Next Story
    ×