search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார்.
    • நான் பேராசைக்காரன் இல்லை. கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்.

    இன்றைய காலக்கட்டத்தில் உழைத்தாலே, தினமும் குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனால் மும்பையை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்தே, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது அவர் தான் உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் என்று கண்டறியப்பட்டு இருக்கிறார்.

    அவரது பெயர் பாரத் ஜெயின் (வயது 54). மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். தினமும் 12 மணி நேரம் பிச்சை எடுப்பாராம். அதன் மூலம் தினசரி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 வரை கிடைக்குமாம்.

    ஒரு ரூபாய் பிச்சை போட்டாலும், அதனை இன்முகத்துடன் வாங்கி கொள்வாராம். மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறார்.

    பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார். அந்த வீட்டில்தான் அவரது குடும்பம் வசித்து வருகிறது. இதுதவிர 2 கடைகளையும் வாங்கி இருக்கிறார். அந்த கடைகள் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அவரது 2 பிள்ளைகளும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர், இனியும் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் பாரத் ஜெயின், தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். தற்போது அவரது சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும்.

    இது குறித்து அவர் கூறும் போது, 'நான் பேராசைக்காரன் இல்லை. நான் தாராளமாக வாழ்கிறேன். கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்' என்று கூறுகிறார்.

    இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை பிச்சை எடுக்கும் தொழிலில் நிதி புரள்கிறது. மும்பையை சேர்ந்த சம்பாஜி காலே என்ற பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். லட்சுமி தாஸ் என்பவரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி இருக்கிறது.

    "என்னைப் பார்த்தால் பேசாமல் பிச்சை எடுக்கலாம் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல" என்று கர்வத்துடன் கூறுகிறார் பணக்கார பிச்சைக்காரர் பாரத் ஜெயின்.

    • 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.
    • புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-29 என்ற புள்ளிகள் கணக்கில வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெய்ப்பூர் அணி 9வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

    இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி 42-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • EVM-ல் பதிவான வாக்குகளையும், VVPAT ரசீதுகளையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
    • இந்த முரண்பாடும் அதாவது வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை என தெரிவிப்பு.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதாக மகா விகாஸ் அகாடி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். மகாயுதி கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்றது. மகா விகாஸ் அகாடி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த 23-ந்தேதி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும ஐந்து வாக்கு மையங்களின் VVPAT ரசீதுகளை எண்ணியுள்ளது.

    VVPAT ரசீதுகளின் மொத்த எண்ணிக்கையும், EVM-ல் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இரு வாக்குகள் சரியாக இருந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியவர்களுடன் சரிபார்த்ததற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது.

    இந்த எண்ணிக்கை கடும் பாதுகாப்பு நடவடிக்கையுடன் தனி அறைகளில், சிசிடிவி மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

    • பேருந்து விபத்தில் 43க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லா பகுதியில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து திடீரென வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 43க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.

    • விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லா பகுதியில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து திடீரென வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் குஜராத் அணி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    இதில், பாட்னா அணி 38-28 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 34-33 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    • வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன்
    • மகா.சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 48 இடங்களை மட்டுமே மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி கைப்பற்றியது

    பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் காங்கிரசுடன் மாநிலக் கட்சிகள் சேர்நது உருவாக்கிய இந்தியா கூட்டணி உள்விவகாரங்களில் சிக்கித் திணறி வருகிறது. மாகாரஷ்டிரா மற்றும் அரியானா தோல்வி காங்கிரஸ் மீதான கோபமாக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மத்தியில் மாறி வருகிறது.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் உருவாக்கிய மகா.விகாஸ் அகாதி படுதோல்வியை அடுத்து கூட்டணியில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி மகா. கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. உத்தவ் தாக்கரே பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவளிப்பதாகக் கூறி சமாஜ்வாதி வெளியேறி உள்ளது.

    இதற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தான் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    கொல்கத்தாவில் தனியார் செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்த மம்தா, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்றார்.

     

    ஏன் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மம்தா இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க முழு தகுதியும் உள்ளவர் என்று மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் பிரிவு தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

     

    இதுகுறித்து நேற்று [சனிக்கிழமை] கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், மம்தா திறமையான தலைவர், எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது.

    அவர் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய [திரிணாமுல் காங்கிரஸ்] எம்.பி.க்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்று பாராட்டிப் பேசினார்.

    ராகுல் காந்தி மீது இந்தியா கூட்டணி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் சரத் பவார் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    மகா.சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 48 இடங்களை மட்டுமே மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி கைப்பற்றியது. இதில் சரத் பவார் என்சிபி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.   

    • சட்டப்பேரவையின் சிறப்பு மூன்று நாள் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது
    • இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.

    புதிதாக அமைக்கப்பட்ட மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) உறுப்பினர்கள் இன்று [ஞாயிற்றுக்கிழமை] எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர்.

    கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி நேற்று நடந்த பதவியேற்பை எம்.வி.ஏ உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில் இன்று பதவியேற்புக்கு இணங்கி உள்ளனர்.

    பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர் சட்டப்பேரவையின் சிறப்பு மூன்று நாள் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோரும் மகாயுதி உறுப்பினர்களும் நேற்று இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.

     

    இந்நிலையில் இன்று காங்கிரஸின் நானா படோல், விஜய் வடேட்டிவார் மற்றும் அமித் தேஷ்முக், என்சிபி (எஸ்பி) தலைவர் ஜிதேந்திர அவ்ஹாத் மற்றும் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட எம்விஏ உறுப்பினர்கள் இன்று அவை மீண்டும் கூடியவுடன் பதவியேற்றனர். தொடர்ந்து சபாநாயகர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது. 

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் யுபி யோதாஸ் அணி 9வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் யுபி யோதாஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய யுபி யோதாஸ் புள்ளிகளைக் குவித்தது.

    இறுதியில், யுபி யோதாஸ் அணி 36-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தி 9வது வெற்றியைப் பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 34-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    • பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
    • குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பை போலீஸ் போக்குவரத்து பிரிவின் உதவி எண்ணிற்கு நேற்று வாட்ஸ்ஆப் மூலம் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

    அதில், 2 ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, போலீசார் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பியவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், அல்லது மதுபோதையில் இருந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி 46 இடங்களில் தான் வென்றது.
    • மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார். என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார். கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.

    288 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றிய நிலையில் எதிர்த்து போட்டியிட்ட மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] மொத்தமே 46 இடங்களில் தான் வென்றது.

    இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி, "டிசம்பர் 6 அன்று, பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி அதன் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜகவுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாம் ஏன் அவர்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டும். ஆகவே மகா விகாஸ் அகாதி கூட்டணியில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×