என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் பகுதியில் 3-வது நாளாக திருட்டு விநாயகர் கோவில் பூட்டை டைத்து உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
- காலை அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- ரேடியோ செட், விநாயகருக்கு அணிவிக்க கூடிய பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 65 ஆயிரம் ஆகும்.
கடலூர்,
கடலூர் கோண்டூர் டி.என்பி.எஸ்சி. நகரில் விநாயகர் கோவில் உள்ளது இக்கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜை முடித்துவிட்டு இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சென்றனர் இன்று காலை அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. மேலும் கோவில் உட்புறத்தில் மரக்கதவு இருந்தது. அதுவும் உடைந்து திறந்து இருந்தது. அதற்குள் சென்று பார்த்த போது ரேடியோ செட், விநாயகருக்கு அணிவிக்க கூடிய பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 65 ஆயிரம் ஆகும். இதனைத் தொடர்ந்து நகர் தலைவர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கடலூர் புதுநகர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடலூர் பகுதியில் கடந்த 3 நாட்களில் 3 கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடியதும் நேற்று அதிகாலை ரோட்டில் நடந்து சென்ற நபரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றனர் மேலும் மற்றொருவரை கடுமையாக தாக்கி செல்போன் பறிக்கும் சமயத்தில் அவர் கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர் நேற்று நள்ளிரவு கடலூர் அருகே விநாயகர் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது லும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்கள் தற்போது குறைந்த அளவில் செல்வதை காண முடிகிறது. எனவே கடலூர் மாவட்ட போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் கொள்ளை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்