search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் டெங்கு காய்ச்சலினால் 10 பேர் பாதிப்பு: இணை இயக்குனர் பேட்டி
    X

    காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.

    காரைக்காலில் டெங்கு காய்ச்சலினால் 10 பேர் பாதிப்பு: இணை இயக்குனர் பேட்டி

    • ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் டெங்குவிற்கு இருவர் பலியானதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நல வழித்துறை தீவிரமாக இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் கூறியதாவது;-

    காரைக்கால் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 80 நபர்களுக்கு டெங்கு கண்டறிய ப்பட்டுள்ளது. இதில் சுமார் 32 நபர்கள் அண்டை மாநி லங்களை சேர்ந்தவர்கள். காரைக்காலை சேர்ந்தவர்கள் 50 நபர்கள். இந்த மாதம் இன்றுவரை 6 நபர்கள் காரைக்காலை சேர்ந்தவர்களுக்கும், அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் 4 நபர்கள் என்று மொத்தம் 10 நபர்களுக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டையும் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளோர் கண்டிப்பாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து விட்டால் குணமாக்கி விடலாம். காலம் கடத்துவதும் சுயமாக மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவதும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். கொசு ஒழிப்பு பணியிலும் டெங்கு விழிப்புணர்வு பணியிலும் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×