என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோடியக்காடு பகுதியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது கோடியக்காடு பகுதியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது](https://media.maalaimalar.com/h-upload/2023/05/22/1885589-4.webp)
கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் மரக்கன்று நட்டு வைத்தார்.
கோடியக்காடு பகுதியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வருகிற 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடைபெற உள்ளது.
- உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வேதாரண்யம்:
உலக சுற்றுச்சூழல் தினம் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வருகிறது.
இதனை யொட்டி நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அறிவுரையின்படி, முதற்கட்டமாக கோடியக்காட்டில் புயல் பாதுகாப்பு கட்டிட வளாகப்பகுதியில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமையில், கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் சுபா, வனவர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் கூறுகையில்:-
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி விழிப்புணர்வு முகாமும், 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமும், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி கடற்கரை தூய்மை படுத்தும் பணியும், நிறைவாக 5-ந் தேதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.