என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் காலையில் 103.64 டிகிரி கடும் வெயில்: மாலையில் இடி மின்னலுடன் மழை
- குளிர்ந்த காற்று வீசி வருவதால் சற்று பெருமூச்சு விட்டபடி பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.
- உடல் நிலை பாதிப்படைந்து பொது மக்கள் அவதி அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று கடுமையாக வீசி வருவதால் மதியம் முதல் மாலை வரை பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி இரவு நேரங்களில் கடும்வெயில் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு பொது மக்களின் இயல்பு நிலையை முற்றிலு மாக சீர்குலைந்து வருகின்றது. இதன் காரண மாக பழச்சாறு, பழ வகைகள், இளநீர், நுங்கு, கரும்பு சாறு, குளிர்பா னங்கள் போன்ற வற்றை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை கடும் வெப்பம் காரணமாக தொடர்ந்து அவதியடைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலத்த இடி மின்னலுடன் திடீர் மழையும் பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சற்று பெருமூச்சு விட்டபடி பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து அதனுடைய தாக்கம் மாலை வரை நீடித்து வந்தது. இதனால் அனல் காற்று வீசி வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 103.64 வெயில் அளவு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் மாலை முதல் திடீரென்று குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் பலத்த இடி மின்னலுடன் கடலூர், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாச்சலம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, அண்ணா மலை நகர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக கடுமையான வெப்பம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியதால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆங்காங்கே இந்த திடீர் மழை காரணமாக விவ சாய பணிகள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க தாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடுமையான சுட்டெரிக்கும் வெயில் மாலை நேரங்களில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு உடல் நிலை பாதிப்படைந்து பொது மக்கள் அவதி அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லிமீட்டர் அளவில் பின்வருமாறு-
லால்பேட்டை - 30.0 சேத்தியாதோப்பு- 29.0 தொழுதூர் - 27.0 காட்டுமன்னார் கோவில் - 24.0 ஸ்ரீமுஷ்ணம் - 13.3 கொத்தவாச்சேரி - 12.0 வானமாதேவி - 10.25 பெல்லாந்துறை - 9.2 எஸ்.ஆர்.சி குடிதாங்கி - 7.0 புவனகிரி - 7.0 குப்பநத்தம் - 5.2 குறிஞ்சிப்பாடி - 5.0 அண்ணாமலைநகர்- 3.5 கீழ்செருவாய் - 3.0 சிதம்பரம் - 2.4 விருத்தாசலம் - 2.0 லக்கூர் - 2.0 கடலூர் - 0.௨ மாவட்டத்தில் ெமாத்தம் 192.05 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.






