என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் 109-ம் ஆண்டு தேர்பவனி
- அலங்கார தேர்பவனி புனித வனத்து சின்னப்பர் கல்லறை தோட்டத்திலிருந்து புறப்பட்டு வடக்கு வாசல் கல்லுக்கட்டித்தெரு விற்கு வந்தடைந்தது.
- சுதந்திரம் பெற்றதற்கு முன்பிருந்தே, இவ்விழா கொண்டாடப்பட்டு வருவது தெரு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வாசல் கல்லுகட்டி தெரு, புனித வனத்து சின்னப்பர் 109ம் ஆண்டு அன்னதான விழா மற்றும் அலங்கார தேர்பவனி நடந்தது.
கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த விழா, இந்த ஆண்டு அரசின் வழிகாட்டுதல் படியும், மக்கள் பேராதரவோடும், வெகு விமர்சையாக நடந்தது.
விழாவில் முக்கிய நிகழ்வாக ஆலய பங்கு தந்தை அருள், உதவி பங்கு தந்தை ஜோகிளமென்ட், நடத்திய கூட்டுத் திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுதந்திர தினத்தன்று நடந்த விழாவில் நிறைவாக, புனித வனத்து சின்னப்பரின் திருஉருவம் தாங்கிய அலங்கார தேர்பவனி புனித வனத்து சின்னப்பர் கல்லறை தோட்டத்திலிருந்து புறப்பட்டு வடக்கு வாசல் கல்லுக்கட்டித்தெரு வந்தடைந்தது.
ஏராளமான பொது–மக்கள், புனிதரின் நல் ஆசியை பெற்றதுடன் ஆலயம் சார்பில் வழங்கப்பட்ட அன்னதானத்திலும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஏற்பாடுகளை, தெரு தலைவர்கள், இளைஞர், நற்பணி மன்றத்தினர், மாதர் மன்றத்தினர் மற்றும் வடக்குவாசல் கல்லுக்கட்டி தெருவாசிகள் ஒன்று சேர்ந்து ஆலய பங்கு தந்தை அருள், உதவி பங்கு தந்தை ஜோகிளமென்ட் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சுதந்திரம் பெற்றதற்கு முன்பிருந்தே, இந்த விழா தொடர்ந்து 109 ஆண்டாக கொண்டாடப்பட்டு வருவது தெரு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன், அரசின் வழிகாட்டுதல் படியும் நடந்த இந்த விழாக்களில், தஞ்சை ஆயர் இல்ல வேந்தர் ஜான் சக்கிரியாஸ் தலைமை வகித்து சிறப்பித்து விழாவை மேலும் சிறப்படைய செய்ததுடன், நல்லாசி கிடைத்ததாக பொது–மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்
பாதுகாப்பு ஏற்பாடுகளை கள்ளப்பெரம்பூர் காவல் துறையினர் செய்திருந்தனர். தெருவாசிகள் டோமினிக், அற்புதராஜ், லியோ, ஜான்சன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்