search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 செ.மீ. மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தளவாடபொருட்கள்
    X

    காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட தளவாடபொருட்களை படத்தில் காணலாம்.

    காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 செ.மீ. மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தளவாடபொருட்கள்

    • காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 செ.மீ. மழையில் காட்டாற்று வெள்ளத்தில் தளவாடபொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
    • இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது.

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது. மேலும் காட்டுமன்னா ர்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அதைசுற்றியுள்ள பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீமுஷ்ணம் புலியூர் அருகே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று பெய்த மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாலத்தின் வேலை நின்றது. இந்த பாலம் ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து விருத்தாச்சலத்தை இணைக்கும் பாலமாக உள்ளது.

    மேலும் இந்த பாலம் வேலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. ரெட்டியார்பேட்டை, வெள்ளிக் கரணை, நாச்சியார் பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் இந்த பாலத்தை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர். இதனால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

    Next Story
    ×