என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தஞ்சையில் 12-ந்தேதி மினி மாரத்தான் தஞ்சையில் 12-ந்தேதி மினி மாரத்தான்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/08/1833169-12.webp)
தஞ்சையில் 12-ந்தேதி மினி மாரத்தான்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது.
- வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) கும்பகோணம் மண்டலம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.
பொது போக்குவரத்தை பலப்படுத்திட, விபத்தை தடுத்திட, பொதுத் துறையை பாதுகாத்திட வலியுறுத்தி வருகிற 12-ம் தேதி காலை 6 மணி அளவில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம் ரூ. 200 மட்டும். முன் பதிவிற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை மாலை 6 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மாரத்தானில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் 9894377805, 7010411396 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.