search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில்  வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1,206 பேர் எழுதினர்
    X

    டவுன் சாப்டர் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்த போது எடுத்த படம்.

    நெல்லை மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1,206 பேர் எழுதினர்

    • நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையில் இதற்காக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
    • நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் இப்பணிகளை கண்காணித்தனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக வட்டார கல்வி அலுவலருக்கான தேர்வு நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையில் இதற்காக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு எழுத மாவட்டத்தில் மொத்தம் 1,451 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இதில் இன்று 1,206 பேர் தேர்வு எழுதினர். 245 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கி தேர்வு மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கண்காணிக்க மாநில அளவில் கல்வித்துறை குழுவை அமைத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் இப்பணிகளை கண்காணித்தனர். தேர்வர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உப கரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை.

    Next Story
    ×