என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடலூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 123 கடைகளை இன்றுக்குள் அகற்ற வேண்டும் கடலூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 123 கடைகளை இன்றுக்குள் அகற்ற வேண்டும்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/29/1988577-probaganda.webp)
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி மாநகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்ட போது எடுத்த படம்.
கடலூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 123 கடைகளை இன்றுக்குள் அகற்ற வேண்டும்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கடலூர்:
கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலக சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன.இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன.கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக அந்த கடைகளின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை தொடங்கினார்கள்.
அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக அவகாசம் வழங்கி, கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய கூடுதல் அவகாசம் இன்றுடன் முடிகிறது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை இன்றுக்குள் அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஊழியர் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.