என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட  13 தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

    • தூத்துக்குடி ரூரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தென்பாகம் காவல் நிலயத்திற்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • கடம்பூர் காவலர் சந்தோஷ் செல்வம் புதுக்கோட்டை தனிப்பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சப்-இன்ஸ் பெக்டர்கள் உட்பட 13 தனிப்பிரிவு காவ லர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    இடமாற்றம்

    இதன்படி, விளாத்திகுளம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தருவைகுளம் காவல் நிலை யத்திற்கும், திருச்செந்தூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரகு திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி ரூரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தென்பாகம் காவல் நிலயத்திற்கும் இட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    தென்பாகம் தனிப்பிரிவு காவலர் மாரிக்குமார் தென்பாகம் காவல் நிலை யத்திற்கும், புதுக்கோட்டை தனிப்பிரிவு காவலர் சாமிக்கண்ணு தட்டப்பாறை காவல் நிலையத்திற்கும், எப்போதும்வென்றான் காவலர் செல்வகுமார் பசுவந்தனை தனிப்பிரி விற்கும், பசுவந்தனை காவலர் கணபதி எப்போதும்வென்றான் தனிப்பிரிவிற்கும், கடம்பூர் காவலர் சந்தோஷ் செல்வம் புதுக்கோட்டை தனிப்பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    செய்துங்கநல்லூர்

    சாயர்புரம் காவலர் மைக்கேல்ராஜ் கடம்பூர் தனிப்பிரி விற்கும், விளாத்தி குளம் காவலர் ஜெயசந்திரன் புதூர் தனிப்பிரிவிற்கும், புதூர் காவலர் நாகார்ஜுனன் மாசார்பட்டி தனிப்பிரி விற்கும், செய்துங்கநல்லூர் காவலர் ராஜேஷ் சேரகுளம் தனிப் பிரிவிற்கும், சேர குளம் காவலர் சங்கரசுப்பு செய்துங்க நல்லூர் தனிப் பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×