search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்தனர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்தனர்

    • தமிழக அரசு ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
    • 132 பேரில் 90-ல் இருந்து 100 பேர் வகையில் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்து நாடு முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

    விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் அதிக அளவில் தமிழக பயணிகள் இருந்துள்ளனர். இந்த ரெயிலில் மொத்தம் 867 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த பலரும் முன்பதிவு செய்து பயணம் செய்திருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் 127 பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு வங்கத்தில் இருந்து சென்ட்ரல் வரும் வழியில்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இந்த ரெயிலில் சென்னை நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்போதுதான் அவர்களில் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதேபோன்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழக பயணிகள் 5 பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 132 தமிழர்கள் 2 ரெயில்களிலும் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தமிழக அரசு ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

    அதே நேரத்தில் காயம் அடைந்த தமிழர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். இது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக 5 அல்லது 6 மணி நேரம் கழித்தே தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பற்றிய விவரங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக ஒடிசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த 132 பேரில், 90-ல் இருந்து 100 பேர் வகையில் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுமார் 35 பேரின் செல்போன் இணைப்புகள் மட்டும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளன என்று வருகிறது. இவர்கள்தான் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    Next Story
    ×