search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 15 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன - அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
    X

    புலியூர்நத்தம் ஊராட்சியில் புதிய ரேசன் கடையை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

    தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 15 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன - அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

    • ரூ.7.60 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி வைத்தார்.
    • 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 15 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என பேசினார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரூ.2 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ரூ.7.60 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மகளிர் உரிமை திட்டம் வழங்கியதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துள்ளார். முதியோர் உதவித்தொகை ரூ.1200 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 15 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வயதானவர்கள், மாற்றுத்திற னாளிகள், நோயாளிகள் என ரேசன் கடைக்கு செல்ல முடியாதவர்கள் பொருட்கள் வாங்க வேறு ஒருவரை நியமித்து விண்ணப்பம் அளித்தால் அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். தமிழகத்தில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்ப ட்டுள்ளது. பரப்பலாறு அணை விரைவில் தூர்வாரப்படும். குடிநீர், தெருவிளக்கு, பஸ் வசதி, கல்வி, சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×