என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரமடை ஒன்றியத்தில் 17 ஊராட்சி செயலாளர்கள் நீதிகேட்டு விடுப்பு போராட்டம்
- மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் ஊராட்சி.
- 2 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் ஊராட்சி. இந்த ஊராட்சி செயலாளராக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார், காரமடை ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் உடன் சேர்ந்து மருதூர் ஊராட்சியில் சாலை அமைத்தல், ஊராட்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பல்வேறு பணிகளில் ஊழலில் ஈடுபட்டதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. அதன்பேரில் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சதீஷ்குமாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்தும் வரை 17 ஊராட்சிகளில் பணியாற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் இன்று விடுப்பு எடுத்து மாவட்ட கலெக்டரிடம் நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களின் இந்த போராட்டத்தால், அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்ட பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது. மேலும் இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.