search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் மக்கள் நீதிமன்றம் கால் துண்டான பெண்ணுக்கு 17.6 லட்சம் இழப்பீடு
    X

    நாமக்கல்லில் மக்கள் நீதிமன்றம் கால் துண்டான பெண்ணுக்கு 17.6 லட்சம் இழப்பீடு

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • சாலை விபத்துகள், வங்கி காசோலை வழக்குகள், கல்விக் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் மூலம் செய்து தீர்வு செய்யப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நீதிமன்றத்தில், குடும்ப நலநீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரையா, தலைமை குற்றவியல் நீதிபதி வடிவேல், கூடுதல் சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நீதிபதிகள் கலந்துகொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்தனர். சாலை விபத்துகள், வங்கி காசோலை வழக்குகள், கல்விக் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் மூலம் செய்து தீர்வு செய்யப்பட்டன.

    இதில் ராசிபுரம், கோனே ரிப்பட்டியைச் சேர்ந்த, கவிதா என்பவர், அவரது 3 சக்கர வாகனத்தில் கடந்த 18.2.2012 ல் அன்று நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் செல்லும் போது, கருங்கல்பாளையம் அருகே ரோட்டில் சென்றபோது, போது அவ்வழியாக வந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது. இதற்காக தொடரப்பட்ட வழக்கு, மக்கள் நீதிமன்றத்தல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருக்கு, ரூ17.66 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு செயலாளர் விஜய்கார்த்திக் செய்திருந்தார்.

    Next Story
    ×