என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
- தனியே நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடை பெற்றது.
- சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே பூட்டிக்கிடக்கும் வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையிலும், சாலையில் தனியே நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும் தொடந்து நடைபெற்று வந்தது.
இது தொடர்பான புகார்கள் மாவட்ட குற்றபிரிவு போலீசாருக்கு சென்றது.
இதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட தனிப்படை போலீசார், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட அஞ்சார்வார்த்தலை பகுதியில் கொள்ளையர்கள் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவரும் போலீசாரைக் கண்டதும் மோட்டார் சை்கிகளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
அவர்களை தனிப்படை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராம்பாறை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செல்வம் என்கிற முனியப்பிள்ளை என்பதும், இவர்கள் இருவரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மறையூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பூட்டிய வீட்டை உடைத்து 2 சவரன் நகை மற்றும் ரூ.10,000/- ரொக்கம் திருடிய சம்பவத்திலும், பெரம்பூர் கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்ச ம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களி டமிருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இவர்கள்மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்