என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-1 மாணவர் கொலையில் 2 சிறுவர்கள் கைது
- நண்பர்கள் 4 பேர் உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
- தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கஞ்சா மற்றும் குடி பழக்கத்துக்கு அடிமையான இவர் சத்தி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மாணவரை தாக்கி கொலை செய்தது யார் என்பது குற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக மாணவர் இறந்து கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாக காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவரை அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. காட்சிகளை கைபற்றி போலீசார் மாணவரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். இறந்த எங்களுடைய நண்பர் கஞ்சா மற்றும் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
சம்பவத்தன்று நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் நாங்கள் எங்களது நண்பருக்கு அறிவுரை கூறினோம். இதனை ஏற்க மறுத்த அவர் எங்களிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கினோம். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.
இதனால் பயந்த நாங்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார். தொடர்ந்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்