என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே பரபரப்பு விஷ கள் குடித்த 2 பேர் மயக்கம்ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- 3 மணியளவில் பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர்.
- புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் உள்ளன. இவர் பனங்கிழங்கு விளைவித்து விற்பனை செய்து வருகிறார். இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. அரசால் தடைசெய்யப்பட்ட கள் பானத்தை தனக்கு சொந்தமான மரத்தில் இறக்கி குடிப்பதை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்துவிடுகிறார். ஊமத்தங்காய் கள் அருந்துபவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும், அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம் என்று சந்தானம் திட்டமிட்டு இருந்தார்.
அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர். வெளியில் வந்த சந்தானம் உடனடியாக 2 பேரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலைக்கு வருவதை கண்ட மருத்துவர்கள், அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்த போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா, இது போன்று எங்கெல்லாம் பனைமரங்கள் உள்ளன. அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து, அதனை அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து பனைமரங்களையும் ஆய்வு செய்தனர். மேலும், விஷ கள் குடித்து 2 பேர் வாந்தி, மயக்கத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருவது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்