என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாபநாசம் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்ற வழக்கில் 2 பேருக்கு சிறை
- அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்கள் 48 அடங்கிய 14 அட்டைப்பெட்டிகள் வீட்டில் வைத்திருந்ததை போலீசார்கள் கண்டுபிடித்தனர்.
- அப்துல் கனி அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் பகுதியில் கடந்த 8.12 2016 அன்று அப்போதைய பாபநாசம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவில் தேவராயம்பேடை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி வயது 34 அவரது அண்ணன் முரளி 40 ஆகிய இருவரும் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயற்சி செய்தார்கள்.
உடனே அவர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்கள் 48 அடங்கிய 14 அட்டைப்பெட்டிகள் வீட்டில் வைத்திருந்ததை போலீசாார்கள் கண்டுபிடித்தனர்.
பின்னர் அங்கிருந்த 672 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து பாபநாசம் போலீசார்கள் வழக்கு பதிவு செய்து அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்திருந்தனர்.
வழக்கை விசாரணை செய்த பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.