search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே கஞ்சா சாக்லெட் விற்ற 2 பேர் கைது
    X

    சூலூர் அருகே கஞ்சா சாக்லெட் விற்ற 2 பேர் கைது

    • வடமாநில வாலிபர்களிடம் இருந்து 880 சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை சூலூர் சிந்தாமணிபுதூர் அருகே உள்ள பேக்கரி முன்பு சிலர் கஞ்சா சாக்லெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரிய நாயக்கன் பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை பதுக்கி விற்ற 2 வட மாநில தொழிலாளர்களை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 880 கஞ்சா சாக்லெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்சந் சாடா (வயது 30), ராஜ்குமார் (29) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    செட்டிப்பாளையம் போலீசார் மலுமச்சம்பட்டி அம்பாள் நகர் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஈரோட்ைட சேர்ந்த ஜி. கோகுல் (22), திருச்சியை சேர்ந்த கே. கோகுல் (22) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சிறுமுகை போலீசார் அந்த பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற அறிவு திருக்கோவில் வீதியை சேர்ந்த பிளம்பர் யுவராஜ் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் யுவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×