search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க வேண்டும்- மணியரசன் பேட்டி
    X

    தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பேட்டி அளித்தார்.

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க வேண்டும்- மணியரசன் பேட்டி

    • செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வேண்டும்.
    • சந்தை விலைக்கு ஏற்ப லாப விலையும் நடப்பு நிதிநிலை அறிக்கையிலே வழங்கி உழவர்களை காக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்பு குழு கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் பொருளாளர் மணிமொழியன், வெள்ளாம்பெரம்பூர் துரை ரமேஷ், திருவாரூர் கலைச்செல்வன், ரத்தின வேலவன், ராமலிங்கம், சீராலூர் தனபால், பூதலூர் சுந்தரவடிவேல், தமிழ் தேசிய பேரியக்கம் நிர்வாகிகள் வைகறை, விடுதலை சுடர், பழ. ராஜேந்திரன், தென்னவன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடியில் திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வரை தொடர் வேளாண் தொழில் பெருந்தடம் உருவாக்கப் போவதாக அறிவித்தது.

    பெரும் தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலை மண்டலமாக தொழில் பேட்டைகளின் தொடர் சங்கியாக இது அமைக்கப்பட கூடாது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்ட ஏற்பாட்டிற்கு ஊரு நேரா வண்ணம் உணவுத்துறை சார்ந்த சிறுகுறு தொழில்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பல ஆண்டுகளாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2600 விலை தருகிறது. அதுபோல் தமிழ்நாடு அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.

    2 thousand 500 per quintal should be provided for paddy - Maniarasan interviewமேலும் இதர வேளாண்மை பொருட்களுக்கு சந்தை விலைக்கு ஏற்ப லாப விலையும் நடப்பு நிதிநிலை அறிக்கையிலே வழங்கி உழவர்களை காக்க வேண்டும்.

    நியாய விலை கடைகளில் உயிர்ம வேளாண் உற்பத்தி பொருட்கள், அரிசி தொடங்கி சிறு தானியங்கள், காய்கறிகள் என பலவும் மானிய விலையில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    உயிர்ம வேளாண்மை நிலங்களுக்கு இயற்கை எரு கிடைக்க கிடை போட அரசு நிதி உதவிகள் வழங்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டம் திருமண்டங்ககுடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் 123 நாட்களாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய கரும்பு பாக்கி தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்.

    தவறான வங்கி கடன்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டில் வெளிப்படை தன்மை தேவை. செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×