என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலத்தில் தி.மு.க. இளைஞரணி கூட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன் குமார் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
    X
    திருமங்கலத்தில் தி.மு.க. இளைஞரணி கூட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன் குமார் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

    கலைஞர் பிறந்த நாள் விழாவை மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும்-கூட்டத்தில் தீர்மானம்

    கருணாநிதி பிறந்த நாள் விழாவை மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும் என இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருமங்கலம்

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை மாதம் முழுவதும் கொண்டாட திருமங்கலத்தில் நடைபெற்ற தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா நாளை (3-ந் தேதி) தமிழகம் முழுவதும் தி.மு.க.சார்பில்  நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு அவைத்தலைவர் நாகராஜன்,திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், அணி அமைப்பாளர் சுரேஷ், விமல், வினோத், ஓடைப்பட்டி சிவா, நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் நகர நிர்வாகி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன், கொரடா ஆறுமுகம்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில்  மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் பேசும் போது, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.  

    இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு 8 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் வழங்கியதற்கும், இருமண்டல குழுதலைவர் பதவி வழங்கியதற்கும் தலைமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி நகர, ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×