என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 தமிழ் தேர்வை போல் ஆங்கில தேர்வையும் 2,418 பேர் எழுதவில்லை
- தமிழ் மொழித் தேர்வில் 2,492 பேர் பங்கேற்வில்லை. இது கல்வி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்–சியை ஏற்–ப–டுத்–தி–யது.
- இதனிடையே நேற்று நடந்த பிளஸ்-2 ஆங்–கி–லம் தேர்விலும் 2,418 பேர் பங்கேற்கவில்லை.
சேலம்:
2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்க ளில் நடைபெறுகிறது.
இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுத நுழைசீட்டு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழ் மொழித் தேர்வில் 2,492 பேர் பங்கேற்வில்லை. இது கல்வி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே நேற்று நடந்த பிளஸ்-2 ஆங்கிலம் தேர்விலும் 2,418 பேர் பங்கேற்கவில்லை. சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 40 ஆயிரத்து 28 பேர் ஆங்கில தேர்வு எழுத வேண்டும். ஆனால், 37 ஆயிரத்து 402 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இதனால் 2,418 பேர் ஆங்கில தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆப்சென்ட் -க்கு என்ன காரணம்? என்பது குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம், சேலம் மாவட்ட பள்ளிக்கல்வி முதன்மை அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயர் கல்வி அதிகாரிகள், எந்த எந்த பள்ளிகளில் ஆப்சென்ட் அதிகமாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க வில்லையா? எனவும், அதிக வெயில் காரணத்தால் தேர்வு எழுத வரவில்லையா? எனவும் பல்வேறு கோணங்க ளிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிப்ெபறும் பள்ளி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாண வர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படும். மேலும் அந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்க செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதா? என்பது குறித்தும் வகுப்பு ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்