search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  கீழே கிடந்த 2 பவுன் தங்க செயின் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைப்பு:    ஆட்டோ டிரைவருக்கு சன்மானம்
    X

    தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி ஆட்டோ டிரைவர் சிங்காரவேலுவை பாராட்டி சன்மானம் வழங்கினார்.

    தியாகதுருகம் அருகே கீழே கிடந்த 2 பவுன் தங்க செயின் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைப்பு: ஆட்டோ டிரைவருக்கு சன்மானம்

    • தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). இவர் ஆட்டோ ஓட்டிந்தபோதுசாலையில் செயின் கிடப்பதை பார்த்தார்.சுமார் 2 பவுன் அளவிலான தங்க செயின் என்பதை உறுதி செய்தார்.
    • தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் ஒப்படைத்தார்.

    கள்ளக்குறிச்சி, மார்ச்.14-

    தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் கிராமத்தில் இருந்து ஆட்டோவில் உளுந்து விதை ஏற்றிக்கொண்டு தியாகதுருகத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்து தியாகதுருகம் நோக்கி திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வந்த போது சாலையில் செயின் கிடப்பதை பார்த்தார். உடனே ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி செயினை எடுத்து பார்த்தபோது சுமார் 2 பவுன் அளவிலான தங்க செயின் என்பதை உறுதிசெய்தார்.

    மேலும் அக்கம், பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்து பார்த்ததில் செயின் யாருடையது என தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் சிங்காரவேல் செயினை தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் ஒப்படைத்தார். செயினை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சிங்காரவேலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெகுவாக பாராட்டி சன்மானம் வழங்கினர். அப்போது தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் உடன் இருந்தார். மேலும் இந்த செயின் யாருடையது என்பது குறித்து தியாகதுருகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×