என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தொழிலாளி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது தொழிலாளி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/06/08/1708539-arrest-1.jpg)
தொழிலாளி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீட்டை பூட்டி விட்டு தாயை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
- ரூ. 20 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கோவை,
கோவை சொக்கம்புதூர் அருகே உள்ள மகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பூபதி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது தாயார் உடல் நலக்குறைவு காரணமாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று பூபதி தனது வீட்டை பூட்டி விட்டு தனது தாயை பார்ப்பதற்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து பூபதி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பணத்தை கொள்ளையடித்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31), ஜீவபதியை சேர்ந்த சதீஷ்குமார் (38), கார்த்திக் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.