என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி
- மகேஸ்வரி சம்பவத்தன்று தனது கணவருடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
- மகேஸ்வரி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
கோவை,
பொள்ளாச்சி அருகே உள்ள மரப்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 45).
சம்பவத்தன்று இவர் தனது கணவருடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். மொபட் உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற லோடு வேன் மொபட் மீது மோதியது.இதில் மகேஸ்வரி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (35). லோடு மேன். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பாப்பம்பட்டி - செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மசக்காளி பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் விளாங்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அய்யப்பனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.